முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இரட்டிப்பு 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இம்மாதம் முதல் வழங்கப்படும் என மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவித்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு விசேட சுற்றறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் யமுனா பெரேரா தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 2,500 ரூபா கொடுப்பனவு 5,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version