தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்படாது என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 42,000 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தேங்காய் எண்ணெய் இறக்குமதி இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான பற்றாக்குறை, இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத நடுப்பகுதி வரை தொடரும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேங்காய் எண்ணெய் கொண்டுவருவதற்கான கொள்கலன் பற்றாக்குறை மற்றும் கப்பல் போக்குவரத்தின் தாமதம் இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட்ட பிலிப்பைன்ஸ் நிறுவனம் மூடப்பட்டுள்ளமையும் இதற்கான காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.