மன்னாரில் விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு 

மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருங்கன் ரயில் கடவை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

நேற்று(24.04) மாலை 5 மணியளவில், பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.  

மன்னாரில் இருந்து சென்ற தென் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்தும், வவுனியாவிலிருந்து முருங்கன் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு மோதியுள்ளது. 

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த நபர், நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் நாக செட்டிக் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சுந்தரலிங்கம் தீபன் எனும் இளம் குடும்பஸ்தர் என தெரிய வந்துள்ளது. 

சடலம் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர். 

மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version