1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் ஊடாக அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ள இலக்குகளை அடைய முடியாது எனவும் இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுற்றுலா அமைச்சினால் இறக்குமதி செய்யப்படவுள்ள 1000 வாகனங்களை புதிய முகவர்களின் ஊடாக இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இதன் காரணமாக வாகன இறக்குமதியில் ஈடுபடும் பல முகவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
புதிய முகவர்களின் ஊடாக வாகனத்தை இறக்குமதி செய்வதனால் 6 முதல் 8 மாதங்கள் வரை காலதாமதம் ஏற்படும் எனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது