ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுக் கோரி இன்று (26.05) சுகவீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் போராட்ட பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி.சசிதரன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.