பஸ்கள் மோதுண்டு விபத்து -11 பேர் காயம்

வெலிமடை – அம்பகஸ்தோவ பகுதியில் இரண்டு பஸ்கள் மோதுண்டதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெதவெலயிலிருந்து – வெலிமடை நோக்கிப் பயணித்த பஸ்ஸொன்றும் ஓல்டிமாரிலிருந்து வெலிமடை நோக்கிப்
பயணித்த பஸ்ஸொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 07 பெண்களும் 04 ஆண்களுமே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version