எரிபொருட்களின் விலையில் மாற்றம்  

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று(30.06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்துள்ளது. 

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், புதிய விலை 344 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், புதிய விலை 379 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், புதிய விலை 355  ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றம் செய்யப்பாடமையினால், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று பழைய விலையான 317 ரூபாவிற்கு, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 202 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version