சுங்கத் திணைக்கள ஊழியர்கள் நாளை(04.07) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
சுங்கத் திணைக்களம், வருமான வரி திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றை இணைத்து ஒரே நிறுவனமாக மாற்ற முயற்சிப்பதாக தொழிற்சங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் நோக்கில் நாளை(04.07) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு சுங்கத் திணைக்கள ஊழியர்களின் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.