அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு, சிவப்பு பருப்பு மற்றும்
வெள்ளை சீனியின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 215 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு பருப்பு கிலோ கிராம் ஒன்றின் விலை 14 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 282 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோ வெள்ளை சீனி 06 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 269 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version