அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்திற்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான பிரச்சினையை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடியுள்ளார்.
19வது திருத்தச் சட்டத்திற்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஒரு கோணத்தில் பார்க்கும்போது 5 வருடங்கள் எனவும், மற்றுமொரு கோணத்தில் பார்க்கும்போது 6 வருடங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 1ம் திகதி அமைச்சரவைக்கு பிரேரணையை சமர்ப்பித்ததாகவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்க படுவதற்கான சாத்தியக்கூறுகள் எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.