‘வெளியே செல்பவர்கள் சென்றாலும் அரசாங்கத்தை அமைப்போம்’ – பிரசன்ன

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா – யக்கல, வீதியாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் தொடர்ந்து உரைக்கையில், ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது எனக்கு கோபம் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிதான் எங்களின் ஆரம்பம். எனவே, அந்த கௌரவம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த காலத்தில் சுதந்திரக் கட்சியை வழிநடத்தியவர்களுடன் எமக்கு பிரச்சினை உள்ளது. அதனால்தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த ஒருவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறினேன்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை அழித்தார். இன்று இந்த அரசாங்கத்தை அழிக்க முயல்கின்றார். ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதியே முழுப்பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு எதிராக செயல்பட வேண்டிய இடத்தில் தினமும் அமர்ந்து பேசுவேன்.

ஆட்சி அமைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை. வெளியே செல்பவர்கள் எல்லாம் வெளியே சென்றாலும் நாங்கள் அரசாங்கத்தை கொண்டு நடத்துவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

'வெளியே செல்பவர்கள் சென்றாலும் அரசாங்கத்தை அமைப்போம்' - பிரசன்ன
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version