கடந்த இரண்டு நாட்களாக ரயில் சேவைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று(11.07) நள்ளிரவு முதல் கைவிடப்பட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்வதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட ரயில் ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதி வழங்கப்பட்ட கடிதங்கள் மீளப் பெறப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.