“வெல்வோம் ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை கிளிநொச்சியில்

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையினை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர்கள்,பணிப்பாளர் நாயகம்,அமைச்சின் கீழ் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள்,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் (காணி)மற்றும் மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலாளர்கள்,திணைக்களங்களின் பணிப்பாளர்கள்,பாடசாலை அதிபர்கள்,மாவட்டச்செயலக பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் வேலைநாட்டில் வேலை வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ள குடும்பத்தினர் மற்றும் வேலைவாய்ப்பை பெறவுள்ள குடுப்பத்தினர்,அவர்களின் பிள்ளைகள் ,பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்

கிளிநொச்சிக்கு பல நன்மைகளுடன் வந்துள்ள ஜயகமு ஸ்ரீலங்கா நடமாடும் சேவை.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நாடளாவிய மக்கள் நடமாடும் சேவையின் நேற்றைய ஆரம்ப நிகழ்வைத்தொடர்ந்து இன்றும் (13.
07) கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

நேற்றைய (12)நாளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கௌரவிக்கும் “ஹரசர திட்டமும் ,புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் , பாடசாலை உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளும் வழங்கிவைக்கப்பட்டன. மேலும் பிரதேச செயலாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான smart Board களும் வழங்கிவைக்கப்பட்டன.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிகழ்வில் , சுயதொழில் ஆரம்பிப்பதற்கான நிதியுதவி, சக்கர நாற்காலி, மூக்கு கண்ணாடி வழங்குதல், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அதிக தடவை பதிவு செய்து வேலைக்காக வெளிநாடு சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சத்தோச வௌச்சர்கள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

மேலும் இந் நிகழ்வுகளை தொடர்ந்து வேலை தேடும் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கும் “ஸ்மார்ட் யூத் கிளப்” நிகழ்வும் இங்கு நடைபெற உள்ளது .

மேலும் இத்திட்டத்தின் ஊடாக தொழில் பயிற்சிக்கான நிதியை ஜனாதிபதி நிதியம் வழங்கிவருகின்றமை தொடர்பான தெளிவூட்டல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன

முறைசாரா தொழிலாளர்களின் தொழில் கௌரவத்தையும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் “கரு சரு” திட்டமும் , ஆட் கடத்தல் மற்றும் தொழிலாளர் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இவ் நடமாடும் சேவையினூடாக மேலும் பல விடயங்கள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

குறிப்பாக உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வெளிநாட்டு தொழிலாளர்களின் முறைப்பாடுகளைப் பெறுதல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான பதிவுகள் மேற்கொள்ளல், தொழில் வங்கியில் பதிவு செய்தல், வெளிநாடு செல்வதற்கு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இழப்பீடு,சம்பளம்,காப்புறுதி தொடர்பான சேவைகள், சிரம வசன நிதியத்தினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்குதல், EPF/ETF தொடர்பான சேவைகள் தொழிற்பயிற்சி கற்கைகளுக்கான பதிவுகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, மீண்டும் வெளிநாட்டு செல்ல முடியாதுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு சுயதொழிலுக்கான நிதி உதவித்திட்டம்,போன்ற பல சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இச்சேவைகளினூடே கிளிநொச்சி மாவட்ட மக்கள் வெகுவாகப் பயனடைவார்கள்,தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தில் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு குறிப்பாக இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தில் அங்கீகரிக்கப்பட்ட 40 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் சேவையை இங்கு இலவசமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version