‘சிங்கபாகு’ திரைப்படத்தை யூடியூப்பில் வெளியிட்ட நபர் கைது 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் வெளியாகிய பிரபல சிங்கள திரைப்படமான ‘சிங்கபாகு’ திரைப்படத்தை, காணொளியாக பதிவு செய்து யூடியூப்பில் வெளியிட்ட குற்றச்சாட்டில் 24 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, கட்டுகஸ்தோட்டை சீகிரி திரையரங்கில் குறித்த திரைப்படத்தை காணொளியாக பதிவு செய்த  சந்தேக நபர், பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 11ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version