LPL – யாழ், காலி அணிகள் அடுத்த சுற்றில்

ஜப்னா கிங்ஸ், கண்டி பல்கோன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக 7 ஓவர்கள் போட்டியாக விளையாடப்பட்டது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது ஜப்னா கிங்ஸ்.

முதலில் துடுப்பாடிய கண்டி பல்கோன்ஸ் அணி 7 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களை பெற்றது. இதில் மொகாமட் ஹரிஸ் 30(13) ஓட்டங்களையும், டினேஷ் சந்திமால் 21(13) ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 11(08) ஓட்டங்களையும் பெற்றனர்.

யாழ் அணியின் பந்துவீச்சில் ஜேசன் பெஹ்ரன்டப் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார். அசித்த பெர்னாண்டோ, அஷ்மதுல்லா ஒமர்ஷாய் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைபப்ற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய யாழ் அணி 5.5 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களை பெற்றனர்.

முதல் மூன்று விக்கெட்களையும் யாழ் அணி வேகமாக இழந்த நிலையில் தடுமாற்றம் உருவானது. வெல்வதற்கு கடினமான நிலையும் உருவானது. ஆனாலும் சரித் அசலங்க அதிரடி நிகழ்த்தி அணியை மீட்டு எடுத்தார். அவிஷ்க பெர்னாண்டோ அவருக்கு கைகொடுத்தார். இதன் மூலம் யாழ் அணியின் வெற்றி இலகுவானது. சரித் அசலங்க ஆட்டமிழந்த பின்னர் வந்த அஷ்மதுல்லா ஒமர்சாய் இரன்டு ஆறு ஓட்டங்களை அடுத்தடுத்து பெற யாழ் அணியின் வெற்றி மேலும் இலகுவானது. பின்னர் அதிரடி நிகழ்த்தி போட்டியை வேகமாக அவர் நிறைவு செய்தார்.

சரித் அசலங்க 26(09) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவிஸ்க பெர்னாண்டோ 16(7) ஓட்டங்களை பெற்றார். அஷ்துல்லா ஓமர்ஷாய் 24(6) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அஞ்சலோ மத்தியூஸ் 2 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார். தஸூன் சாணக்க 2 ஓவர்கள் பந்துவீசி 26 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் யாழ் அணி வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுக்கொண்டது. கண்டி அணியின் தோல்வி காரணமாக காலி அணியும் அடுத்த சுற்று வாய்ப்பை தனதாக்கியுள்ளது. ஏனைய மூன்று அணிகளுக்கும் இன்னமும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால் கண்டி அணிக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version