துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காயமடைந்துள்ளார்.
மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது நபரொருவர் டிரம்ப்பை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது காயமடைந்த ட்ரம்ப் பலத்த பாதுகாப்புகளுடன் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.