அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி
குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அவர் பாதுகாப்பாக உள்ளார் என்ற தகவலால் நிம்மதியடைவதாக தெரிவித்துள்ளார்.
அரசியலில் இலங்கையர்களும் இவ்வாறான வன்முறைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி,
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.