மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமையினால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் சுமார் 20% வீதத்தினால் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று(16.07) முதல் அமலுக்கு வரும் வகையில் மின் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அடுத்த மின் கட்டண திருத்தம் எதிர்வரும் அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை மின் கட்டண திருத்ததினுடாக 90 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அதிக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதுடன், இதனுடாக 79% குடும்பங்கள் பயனடைவதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்திருந்தார்.
மின் கட்டண திருத்ததில் தொழிற்சாலைகள் மற்றும் சிறு வணிகங்களுக்கு 20% மின்சார கட்டணம் குறைப்பு வழங்கப்பட்டுள்ளமையினால், கட்டண அதிகரிப்பின் போது அதிகரித்த விலைகள் தற்போது குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.