ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் ஒருவர்? 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படவுள்தாகவும், அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(16.07) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் எனவும் அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முடியாது எனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை பிற்போட முயற்சித்தால் நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version