கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (28/11) காலை அறிக்கை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (27/11) முதல் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நிறுவனங்கள் பல நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பேக்கரி பொருட்களின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
