மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை(19.07) தம்புள்ளையில் ஆரம்பமாகிறது. இம்முறை ஆசியக் கிண்ணத் தொடர் எட்டு அணிகளின் பங்கேற்பில் டி20 போட்டிகளாக நடைபெறவுள்ளது.
தொடருக்கான ஊடக சந்திப்பும், கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று(18.07) நடைபெற்றது.
பங்கேற்கும் 8 அணிகளும் குழு ஏ மற்றும் பி என ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் இடம் பிடித்துள்ளன.
குழு A: இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம்
குழு B: இலங்கை, பங்களாதேஷ், மலேசியா, தாய்லாந்து
இதுவரையில் 8 மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், 7 முறை இந்திய அணியும் ஒரு முறை பங்களாதேஷ் அணியும் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன.
இம்முறை அனைத்து போட்டிகளும் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், போட்டிகள் அனைத்தையும் பார்வையிட ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடரின் முதல் போட்டியில் நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளதுடன், நாளைய(19.07) தினம் நடைபெறவுள்ள 2வது போட்டியில் இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இலங்கை அணி பங்கேற்கும் முதலாவது போட்டி பங்களாதேஷ் அணிக்கு எதிராக எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ளது.
ரஞ்சித்குமார்
வீ மீடியா
புகைப்பட, செய்தியாளர்
