பங்களாதேஷில் ஊரடங்கு – பலி எண்ணிக்கை 100 ஐ கடந்தது

பங்களாதேஷில் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரச வேலைவாய்ப்புகளில் 30 வீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு
வரும் நிலையில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சம் காணப்படுவதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்களால்
போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால்
முதலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர்
பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருதரப்புக்கும் இடையேயான மோதல் வன்முறையாக வெடித்தது.

பங்களாதேஷில் இடம்பெற்ற இந்த வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்வடைந்துள்ளதுடன்
2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் 300க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள்
அவர்களுடைய நாட்டை சென்றடைந்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version