நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு பரிசுத்தொகை 

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் வழிகாட்டலின் கீழ் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள 06 வீரர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாவும், அவர்களுக்கான 60 இலட்சம் ரூபா நிதி அனுசரணைகான காசோலைகளும் இன்று(20.07) வழங்கி வைக்கப்பட்டன. 

சீனாவில் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் போட்டிகளில் முதல் எட்டு இடங்களை கைப்பற்றிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் 1280 லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

இதேவேளை, பதுளை ஹத்தத்தாவ தேசிய பாடசாலையின் ரக்பி வீரர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களும் இன்று(20.07) வழங்கப்பட்டன. 

நாட்டில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியான சூழலிலும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த தருணத்தில் மக்கள் வெற்றியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நோக்கில் அனைத்து வீரர்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

Social Share

Leave a Reply