ஆசியக் கிண்ணம்: இலங்கை மகளிருக்கு வெற்றி 

மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி இலகுவில் வெற்றியீட்டியது. 

தம்புள்ளையில் இன்று(20.07) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பில் அணித் தலைவி நிகர் சுல்தானா(Nigar Sultana) 48(58) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் பிரபோதனி(Prabodhani), பிரியதர்ஷினி(Priyadharshani) ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

112 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. இலங்கை அணி சார்பில் விஷ்மி குணரத்ன(Vishmi Gunaratne) 51(48) ஓட்டங்களையும், ஹர்ஷித சமரவிக்ரம(Harshitha Samarawickrama) 33(31) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் நஹிதா அக்டர்(Nahida Akter) 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதன்படி, இந்த போட்டியில் குழு ‘பி’ உள்ள இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகியாக இலங்கை அணியின் விஷ்மி குணரத்ன(Vishmi Gunaratne) தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version