குறிஞ்சாக்கேணியில் பலி எண்ணிக்கை உயர்வு

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற மிதப்பு படகு விபத்தில் சிக்கி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வயது சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த எஸ்.நிபா என்றழைக்கப்படும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தற்சமயம் விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

குறிஞ்சாக்கேணியில் பலி எண்ணிக்கை உயர்வு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version