மழையினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்க விசேட விடுமுறை

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு சமூகமளிக்க முடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலன்னறுவை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச ஊழியர்களுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற காரணங்களினால் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைபட்டதால் பணிக்கு சமூகமளிக்க தவறியவர்களுக்கு இந்த சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version