ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.   

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version