தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்துள்ள வாகன சாரதிகளுக்கு, எதிர்வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வேளையில், சாரதி அனுமதி அட்டைகளை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக நிரந்தர சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்க முடியாதிருந்ததாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தேவையான சாரதி அனுமதி அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.