வவுனியா ஓய்வுநிலை அதிபர் அகால மரணம்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஓய்வு நிலை அதிபர் இன்று (29/11) காலை காலமானார்.

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் – வேலணையில் வசித்துவரும் இவர், தனது வீட்டின் பின்புறத்திலுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

காலை உணவுக்காக பிட்டு தயார் செய்து கொண்டிருக்கும் போது கிணற்றடிக்கு சென்ற இவர் வெகு நேரமாகியும் திரும்பாத நிலையில், அவரது மகன் இறுதியாக சென்று கிணற்றடியில் பார்க்கும் பொழுது, கிணற்றுக்குள் விழுந்தவாறு தந்தை காணப்பட்டதாகவும் மேலும் அவருக்கு ஒரு கண்ணில் பார்வை குறைப்பாடு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் உடனடியாக மீட்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய அவரது உடல் யாழ். வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஓய்வுநிலை அதிபர் அகால மரணம்
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version