ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.