பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதியினால் பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் இன்று(26.07) தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை வழங்கியுள்ள அங்கீகாரத்தை நீதிமன்றத்தினால் மாற்றியமைக்க முடியாது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடையுத்தரவுக்கு எந்தவொரு சட்ட அடிப்படையும் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் குறித்த தடையுத்தரவை பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸ் மா அதிபரை நியமிக்க எடுக்கப்பட்ட தீர்மானம் சரியான முறையிலும் மனசாட்சிக்கு விரோதமில்லாமலும் எடுக்கப்பட்டதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று(26.07) தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பதவியை வெற்றிடமாக்குவதாயின் அதற்கு விசேட நடைமுறைகள் காணப்படுவதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலை ஜனாதிபதியினால் கூட தீர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், தேவையேற்படின் நீதிமன்றத்தை நாடி இந்தப் பிரச்சினையை தீர்த்து கொள்ளுமாறும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.