ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்ப அச்சிடும் பணிகள் நிறைவு

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்ப அச்சிடும் பணிகள் அரசாங்க அச்சகத்தினால் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் கட்டுப்பணம் தொடர்பான அச்சிடும் பணிகளை அரச அச்சகம் பூர்த்தி செய்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல் அதிகாரிகளை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்டச் செயலாளரை தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியாக நியமித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியை அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவால் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான அடுத்த கட்ட ஆவணங்களை அச்சிடும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே, தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version