கட்டிட துறை வரிகளினால் அந்நிய செலவானி இழப்பு – துமிலன் எச்சரிக்கை
இலங்கையின் காணி மற்றும் கட்டுமானத் துறை வியாபாரம் சிறப்பாக மீள்ச்சியடைந்து வருகிறதென்பதைத் தொடர்ந்து, இலங்கையின் சீரற்ற கொள்கைகளால் இந்த துறை சர்வதேச தரத்தில் இல்லை என்றும், சர்வதேச ரீதியில் போட்டியிடக்கூடிய நிலையில் இல்லை என்றும் ப்ளூ ஒசியன்( Blue Ocean) குழுமத்தின் தலைவர் சிவராஜா துமிலன் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற Blue Ocean குழுமத்தின் 13வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அதிக வரி விதிப்பு மற்றும் நிலையற்ற கொள்கைகள் காரணமாக, பங்களாதேஷ், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், காணி மற்றும் தொடர் மாடி கட்டிட விலைகள் மிக அதிகமாக உள்ளதாகவும், Blue Ocean குழுமத்தின் தலைவர் சிவராஜா துமிலன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அடுத்த வருடம் ஏப்ரல் 1ம் திகதி முதல் அமுலுக்கு வரவிருக்கும் புதிய வாடகை வரி அறவீட்டுடன் இந்த துறைக்கான விலைகள் அதிகரிப்படுவதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே போட்டித்தன்மை குறைவடையும் என சிவராஜா துமிலன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலைகள் மாற்றம் பெற்றால் அதாவது வரி அதிகரிப்பு மற்றும் புதிய வரிகள் நடைமுறைக்கு வராவிட்டால் இலங்கையில் சுற்றுலாத்துறையிலும் பார்க்க அதிக வெளிநாட்டு வருமானத்தை இலங்கையினால் எட்ட முடியுமெனவுவம் துமிலன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலை நிலவும் காலகட்டத்தில் கட்டிட துறை சுமூகமாக செயற்படுவது கடினம் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.