வறண்ட காலநிலை காரணமாக வவுனியா போகஸ்வெவ பகுதியில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில், வடக்கு மாகாணத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகின்றது.
நேற்று மதியம் போகஸ்வெவ பகுதியில் பரவிய தீயினால் இருநூறு ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன் பூச்சிகள், விலங்குகள் என இயற்கை சூழலும் அழிவடைந்துள்ளன.
தீயணைப்பு மற்றும் வனத்துறையினரின் பெரும் முயற்சியின் பின்னர் இன்று காலை தீ அணைக்கப்பட்டுள்ளது.