வடக்கு கரை பகுதிகளில் 3 சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன.
ஆனால் இந்த சம்பவங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் இதுவரை கிடைக்கிவில்லை.
வட மாகணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இந்த இறப்புகள் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டாலும் சடலங்களை அடையாளம் காணும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (28/11) காலை யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்கரையில் ஒரு சடலமும் நேற்றைய தினம் (27/11) வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதிகளிலும் இரு சடலங்கள் கரையொதுங்கி இருந்தன.
இரு தினங்களில் மூன்று சடலங்கள் யாழ்.மாவட்ட கரையோரங்களில் கரையொதுங்கிய நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
