எரிபொருள் விலை திருத்தம் இன்று (31.07) இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் திருத்தத்தின் படி இந்த திருத்தம் இடம்பெறும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று நள்ளிரவு மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறாது என வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.