மன்னாரில் மாபெரும் இரத்த தான முகாம்

மன்னார் மறை மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயப் பணிகளை ஆற்றிவரும் கறிற்றாஸ்-வாழ்வுதயம் வருடாந்தம் நடத்தி வரும் இரத்த தான முகாமானது நாளை(01/08) காலை 8.30 முதல் மதியம் 2.00  மணி வரை மன்னார் கறிற்றாஸ்,வாழ்வுதயத்தில் இடம் பெறவுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இரத்ததான முகாம் இடம் பெறவுள்ளது.

மன்னார் கறிற்றாஸ்,வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் இணைந்து முன்னெடுக்கவுள்ள குறித்த முகாமில் , இரத்ததானம் செய்வதற்கு அனைவரும் இந்த பணியில் பங்கேற்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version