ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை: சஜித் கண்டனம் 

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதன் மூலம், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை அப்பட்டமாக மீறியமையானது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதிக்கு உச்சகட்ட அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எதிர்காலத்தில் இதன் நேரடி மற்றும் மறைமுக விளைவுகளை நம் நாடு சந்திக்க நேரிடலாம். இந்த நேரத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அமைதியின் செய்தியே தேவைப்பட்டாலும், தொடர்ச்சியாக பதிவாகும் இத்தகைய மனிதாபிமானமற்ற தாக்குதல்களின் விளைவுகளை அப்பகுதியும் ஒட்டுமொத்த உலக மக்களும் அனுபவிக்க வேண்டியுள்ளமை வருத்தமளிக்கிறது. 

எனவே, இந்தப் பிராந்தியத்தில் நிரந்தர அமைதிக்காக உலக நாடுகள் அனைத்தும் முன் நிற்க வேண்டும் மனித நேயத்தை மதிக்கும் தலைவர்களாகிய நாம் இத்தகைய மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு விரைவான மற்றும் நிலையான போர் நிறுத்தம் மற்றும் அவசரமாகத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துமாறு சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.  

ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை: சஜித் கண்டனம் 
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version