ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தேர்தல்கள்
ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 07 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதேவேளை,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை
விரைவில் செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேட்பாளர்களை வலியுறுத்தியுள்ளது.