‘ஒமிக்ரொன் நாட்டிற்குள் நுழைவது தவிர்க்க முடியாதது’

புதிதாக கண்டறியப்பட்ட கொவிட் – 19 இன் புதிய திரிபான ‘ஒமிக்ரொன்’ நாட்டிற்குள் நுழைவது தவிர்க்க முடியாதது என இலங்கை வைத்தியர் சங்கம் நேற்று (28/11) தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் கலாநிதி பத்மா குணரத்ன கூறுகையில், “புதிய திரிபு நாட்டிற்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் ஏற்கனவே எடுத்தது போல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

புதிய திரிபின் நுழைவு தாமதமாகலாம் என்றாலும், அது ஒருபோதும் நாட்டிற்குள் நுழையாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என நாங்கள் கருதுகிறோம்” என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சுகாதார விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, புதிய திரிபு நாட்டிற்குள் நுழையக்கூடிய பல வழிகள் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் உள்ள அமைப்பு மிகவும் பலவீனமாக உள்ளது என்றும், சுற்றுலாப் பயணிகள் வந்தவுடன் இலகுவாக சுகாதார அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு செல்லலாம் என்பதால், அதிகாரிகள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து வழிகளிலும் பயணிகள் பரிசோதனை மேற்கொள்ளாது செல்வதை தடுக்க உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

'ஒமிக்ரொன்  நாட்டிற்குள் நுழைவது தவிர்க்க முடியாதது'
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version