ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சற்று முன்னர் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்த விடயத்தினை அறிவித்தார்.