மாடியிலிருந்து விழுந்து நபர் பலி

நுவரெலியாவில் உள்ள பிரபல சுற்றுலா விடுதியொன்றிலிருந்து தவறி விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (29/11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சுற்றுலா விடுதியின் ஊழியர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், குறித்த நபர் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவர் என்றும் தெரிவித்தனர்.

நேற்றிரவு (28/11) விடுதியில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றிணையடுத்து, அதிகாலை 3 மணியளவில் ஐந்தாவது மாடியில் அவர் தங்கியிருந்த அறையின் ஜன்னல் ஊடாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாகவும், இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (28/11) நீர்கொழும்பில் இளைஞர் ஒருவர் படிக்கட்டிலிருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மாடியிலிருந்து விழுந்து நபர் பலி

Social Share

Leave a Reply