ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் ஆகியோர் மட்டக்களப்பிலுள்ள ஆளுநர் மாளிகையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஆர்.சாணக்கியன் மற்றும் கௌரவ ரி.கலையரசன் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பல பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு தங்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியுடன் பகிர்ந்து கொண்டனர்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, இப்பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்காக அடுத்த வாரம் கொழும்பில் கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆர்.சாணக்கியன் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.