நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கலில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வுக்கோரி அக்கரைப்பத்தனை – டொரிங்டன் தோட்ட மக்கள் இன்று (29/11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தோட்ட நிர்வாகத்தினால் வேலை பார்க்கும் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளமையின் காரணமாக, தேயிலை செடிகள் பராமரிப்பின்றி காடாக மாறி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், 20 கிலோ நிறையுடன் கொழுந்தை பறித்தால் மாத்திரமே ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க முடியும் என்ற தோட்ட நிர்வாகத்தின் நிர்ப்பந்தத்திற்கும் தாம் தள்ளப்பட்டுள்ளோம் என்றும், தேயிலை கொழுந்து விளைச்சலில் ஏற்பட்டுள்ள பாரிய சரிவின் காரணமாக தாம் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.