கழகங்களுக்கிடையிலான போட்டி: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அணிகள் 

கழகங்களுக்கிடையிலான போட்டி: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அணிகள் 

ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டினால் நடத்தப்படும முன்னணி கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடரின் இறுதிப் போட்டிக்கு Ace Capital கிரிக்கெட் கழகம் மற்றும் Colombo கிரிக்கெட் கழகம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. 

இன்று(08.08) நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் வெற்றியீட்டியதனுடாக இரு அணிகளும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 

கொழும்பு, எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் Ace Capital கிரிக்கெட் கழகம் மற்றும் Moors விளையாட்டு கழகம் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய Moors அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Ace Capital அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அணி சார்பில் சம்மு அஷான் 62(87) ஓட்டங்களையும், வனுஜ சஹான் 60(62) ஓட்டங்களையும், தனுக்க தாபரே 43(42) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். Moors அணி சார்பில் பந்துவீச்சில் தனுஷ்க உதார 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

223 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Moors அணி 25.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது. Moors அணி சார்பில் பசிந்து சூரியபண்டார 43(37) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். Ace Capital அணி சார்பில் சித்தும் திசாநாயக்க 4 விக்கெட்டுக்களையும், நிம்சர அத்தரகல்ல 3 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர். 

இதன்படி, இந்த போட்டியில் Ace Capital அணி 98 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. 

கொழும்பு, பி. சரவனமுத்து மைதானத்தில் நடைபெற்ற மற்றைய அரையிறுதி போட்டியில் Sinhalese விளையாட்டு கழகம் மற்றும் Colombo கிரிக்கெட் கழகம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய CCC அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய SSC அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அணி சார்பில் நுவிந்து பெர்னாண்டோ 61(59) ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 42(43) ஓட்டங்களையும், கிஷான் சன்ஜூல 41(64) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். CCC அணி சார்பில் பந்துவீச்சில் சதுரங்க டி சில்வா, லக்‌ஷன் சந்தகன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

240 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய CCC அணி 35.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. CCC அணி சார்பில் பவன் ரத்நாயக்க 157(117) ஓட்டங்களையும், அஞ்சல பண்டார 60(78) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இந்த போட்டியில் CCC அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன், தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. 

இதற்கமைய எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ள முன்னணி கழகங்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடரின் இறுதிப் போட்டியில் Ace Capital கிரிக்கெட் கழகம், Colombo கிரிக்கெட் கழக அணியுடன் மோதவுள்ளது. 

Social Share

Leave a Reply