கண்டியில் மதுபான, இறைச்சி விற்பனைக்கு தடை 

கண்டியில் மதுபான, இறைச்சி விற்பனைக்கு தடை 

கண்டி, எசல பெரஹராவை முன்னிட்டு 11 நாட்களுக்கு கண்டி நகர எல்லையிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய கண்டி நகர எல்லை மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை நாளை(10.08) முதல் எதிர்வரும் 11 நாட்களுக்கு மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், குறித்த காலப்பகுதியில் கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

கண்டி, எசல பெரஹரா நாளை(10.08) முதல் எதிர்வரும் 20ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version