எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்றைய தினம்வரை 27 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 13 பேரும் சுயாதீன வேட்பாளர்கள் 13 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்காகவும் மேலதிகமாக 200 மில்லியன் ரூபாய் நிதியைச் செலவிட நேரிட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி மேலதிகமாக செலவிடுவதற்காக பொது மக்களின் நிதியே பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.