ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் டோலின்ஸ்கிலிருந்து கிழக்கே 212 கிலோமீற்றர் தொலைவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளிவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சக்தி வாய்ந்த நிலஅதிர்வு என்பதால் இரண்டாம் நிலை பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருதாக கூறப்படுகின்றது.
மேலும் மக்கள் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.