திருக்கோணேஸ்வரம் கோயிலில் காணமற்போன பல நூறு கோடி ரூபா பெறுமதியான தாலி

திருக்கோணேஸ்வரம் கோயிலில் காணமற்போன பல நூறு கோடி ரூபா பெறுமதியான தாலி

சோழர் காலம் முதல் திருக்கோணேஸ்வரம் கோயிலிலிருந்த பல நூறு கோடி ரூபா மதிப்புள்ள தாலி,
கடந்த வாரம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போர்த்துக்கேயர் காலத்தில் திருக்கோணேஸ்வரம் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர்த் தியாகங்கள் செய்யப்பட்டு இந்தத் தாலி பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த போதிலும் பல நூறு கோடி மதிப்புள்ள இரத்தினங்கள், வைடூரியங்கள் பதிக்கப்பட்ட 05 பவுண் தாலி
கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டதன் பின்னர் ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்களை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள், ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply