கழகங்களுக்கிடையிலான போட்டி: சம்பியனான ஏஸ் கப்பிட்டல் அணி

கழகங்களுக்கிடையிலான போட்டி: சம்பியனான ஏஸ் கப்பிட்டல் அணி

ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டினால் நடத்தப்படும் முன்னணி கழகங்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய ஏஸ் கப்பிட்டல்(Ace Capital) கிரிக்கெட் கழக அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.

கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் இன்று(11.08) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஏஸ் கப்பிட்டல் கிரிக்கெட் கழகம் மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழகம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஏஸ் கப்பிட்டல் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிரிக்கெட் கழக அணி 45.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அணி சார்பில் இசுரு உதான 80(46) ஓட்டங்களையும், லசித் குருஸ்புல்லே 33(26) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

ஏஸ் கப்பிட்டல் அணி சார்பில் பந்து வீச்சில் நிம்சர அத்தரகல்ல, வனுஜ சஹான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

252 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஏஸ் கப்பிட்டல் அணி 49.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. ஏஸ் கப்பிட்டல் அணி சார்பில் சம்மு அஷான் 97(111) ஓட்டங்களையும், தனுக்க தாபரே 48(34) ஓட்டங்களையும், ரவீன் டி சில்வா 38(93) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

கொழும்பு கிரிக்கெட் கழக அணி சார்பில் பந்து வீச்சில் இசுரு உதான, சொனால் டினுஷ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இதன்படி, 4 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டிய ஏஸ் கப்பிட்டல் கிரிக்கெட் கழக அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஏஸ் கப்பிட்டல் அணியின் சம்மு அஷான் தெரிவு செய்யப்பட்டார். 

Social Share

Leave a Reply